அமித் ஷாவின் அதிமுக கணக்கு… ஓபிஎஸ்க்கு லாஸ்ட் சான்ஸ்… எடப்பாடிக்கு மெசேஜ் இதுதான்!

அதிமுகவில் இனிமேல்

ராஜ்ஜியம் தான். கட்சியின் பொதுச் செயலாளராக நீதிமன்றமும் அங்கீகரித்து விட்டது. தேர்தல் ஆணையமும் நிபந்தனையுடன் ஓகே சொல்லியாச்சு. டெல்லிக்கு சென்று பாஜக சூத்திரதாரியான அமித் ஷாவை பார்த்து இறுதி ஒப்புதலும் பெற்றுவிட்டனர். இனிமேல்

தொல்லை இருக்காது. டெல்லியின் அழுத்தம் வராது என்ற கனவில் எடப்பாடி இருப்பதாக தெரிகிறது. ஆனால் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஒன்றுபட்ட அதிமுக

அதிமுகவின் பிடி தங்களை விட்டு விலகி சென்றுவிடக் கூடாது என்று பாஜக ஒவ்வொரு நகர்வாக பார்த்து பார்த்து எடுத்து வருகிறது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் ஒன்றுபட்ட அதிமுகவை பார்த்து விட வேண்டும். அதன் செல்வாக்கை வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கருதுகிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பலமுறை வலியுறுத்தி விட்டார்.

பாஜக போடு கணக்கு

ஆனால் அதை மட்டும் கேட்காதீர்கள். தனக்கென்று ஒரு செல்வாக்கு உள்ளது. வரும் தேர்தல்களில் நிரூபித்து காட்டுகிறேன். அதிமுகவால் பாஜகவும், பாஜகவால் அதிமுகவும் பலனடையும் என்பது போல் பதில் அளித்துள்ளார். இருப்பினும் ஓ.பன்னீர்செல்வத்தை அப்படியே விட்டு விட டெல்லி தலைமைக்கு விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. அதேசமயம் எடப்பாடி முடிவிற்கும் மதிப்பளிக்க நினைக்கிறது. இதன் வெளிப்பாடு தான் டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அமித் ஷா அளித்துள்ள பேட்டியில் தெரிந்தது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் பேச்சுவார்த்தை

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து பிரச்சாரம் படிப்படியாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுதொடர்பாக அமித் ஷாவிடம் பிரத்யேக பேட்டி எடுக்கையில் அதிமுக விவகாரம் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையிலான பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை. ஏனெனில் இது அக்கட்சியின் உள் விவகாரம். அவர்கள் இருவரும் பேசி சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல்

கடைசியாக சொன்ன பதில் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சினை என்று சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கலாம். ஆனால் பேசி பார்க்கலாம் என்பது போல ஒரு பதிலை அளித்திருக்கிறார். இது ஓபிஎஸ் தரப்பிற்கு சற்றே ஆறுதல் அளித்தாலும், எடப்பாடிக்கு செம கடுப்பை அளித்திருக்கும். மக்களவை தேர்தல் வர இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், பாஜக தரப்பு தமிழகத்தில் எத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தற்போதே உறுதியாக இருக்கிறதாம்.

பாஜகவிற்கு எத்தனை சீட்?

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சொன்ன தகவலின்படி பார்த்தால் 9 இடங்கள். தெற்கிலும், மேற்கிலும் தொகுதிகளை லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது. இதை சரிகட்டும் வகையில் தான் ஓபிஎஸ் விஷயத்தை டெல்லி மீண்டும் எடுக்கிறதா என்ற கேள்வி எழுக்கிறது. பாஜகவின் சீட் கோரிக்கைக்கு அதிமுக உடன்படுமா? ஓபிஎஸ் என்ன ஆவார்? பாஜகவின் 2026 கனவு பலிக்குமா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல அரசியல் களம் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறது. நாமும் காத்திருப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.