ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி தம்பதி உட்பட பலி 3| Ambulance crashes into a tree, killing 3 including a couple

திருவனந்தபுரம் :கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனைக்கு நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி தம்பதி உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர்.

திருச்சூர் அருகே மருதங்கோட்டையை சேர்ந்தவர் ஆபித். அவரது மனைவி ரஹ்மத். இவர்களது உறவினர் பெமினா என்பவருக்கு நேற்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆம்புலன்சில் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

அதே பகுதியை சேர்ந்த சுகைப் ஆம்புலன்சை ஓட்டினார்.

குன்னங்குளம் பகுதியில் சென்ற போது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மரத்தில் மோதியது.

இதில் ஆபித் ரஹ்மத் பெமினா ஆகியோர் சம்பவயிடத்தில் பலியாகினர்.

ஆபித் மகன் பாரிஸ் நண்பர் சாதிக் டிரைவர் சுகைப் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.