அரச வெசாக் விழா மே மாதம் 04-05 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் தலைமையில் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் மாதம்பே கெபெல்லேவல ஸ்ரீ ரதனஷிலி பிரிவென விகாரையில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு இன்றிலிருந்து மே மாதம் 8ஆம் திகதி வரை வெசாக் வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாக பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார்.
இம்முறை வெசாக் விழா வழமை போன்று வெசாக் விழா பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதுடன், பொருளாதார ரீதியாக பல்வேறு பின்னடைவு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறே அன்னதானம் இடம்பெறல், வெசாக் அலங்காரம், மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்த வழிகாட்டல்கள் என்பனவும் அவ்வப்போது அறிவிக்கப்படும் என பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும சுட்டிக்காட்டினார்.
அத்துடன் எதற்காகவும் பௌத்த கொடியை அலங்காரமாக பயன்படுத்தாது இருக்குமாறும் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும கோரிக்கை விடுத்தார்.
அலங்காரத்திற்கு அவசியமாயின் மஞ்சள் கொடியை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.