பட்ஜெட் விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கோ பர்ஸ்ட் நிறுவனம் அண்மைக்காலமாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு இரு காரணம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கோ பர்ஸ்ட் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை.இதுமட்டுமல்லாமல், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிராட் & விட்னி (PRatt & Whitney) நிறுவனம் விமான எஞ்சின்களை வழங்காமல் தாமதித்து வருகிறது. இதனால் கோ பர்ஸ்ட் நிறுவனத்தி 28 விமானங்கள் இயக்கப்படாமல் முடங்கி கிடக்கின்றன.
இந்த சூழலில் மே 3, 4,5 தேதிகளுக்கான விமான டிக்கெட்டுகளை கோ பர்ஸ்ட் நிறுவனம் ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்தப்படும் எனவும் கோ பர்ஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாங்கள் திவாலாகிவிட்டதாக கோ பஸ்ட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், திவால் அறிவிப்பை கோ பஸ்ட் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் அறிக்கையாக தெரிவித்துள்ளது.
மேலும், பங்குதாரர்களின் நலனை பாதுகாக்கவே திவால் நோட்டீஸ் வழங்கியதாக கோ பஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கோ பஸ்ட் நிறுவனத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு விமான சேவை தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப்போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.