கனடாவில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி நபர்: தகவல் கொடுத்தால் 1.5 கோடி சன்மானம்


கனடா அரசு வெளியிட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பட்டியலில், இந்திய வம்சாவளியான கோல்டி ப்ரார் என்பவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

கனடாவின் குற்றவாளிகள் பட்டியல்

கனடா அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் 25 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்திய வம்சாவளியான கோல்டி ப்ரார் என்ற சதீந்தர்ஜித் சிங் ப்ரார் என்பவரும் இடம் பெற்றுள்ளார்.

கனடாவில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி நபர்: தகவல் கொடுத்தால் 1.5 கோடி சன்மானம் | Canada Goldy Brar On Most Wanted Reward 15 Crore@file image

இவர் கனடாவின் பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மோசி வாலா(28) கொலை செய்யபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். கனேடிய அரசு வெளியிட்ட 15வது குற்றவாளிகள் பட்டியலில் கோல்டி ப்ராரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கனடாவில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி நபர்: தகவல் கொடுத்தால் 1.5 கோடி சன்மானம் | Canada Goldy Brar On Most Wanted Reward 15 Crore@twitter

INTERPOL-FAST என்ற தப்பியோடியவர்களை கண்டுபிடிக்கும் அணியினர்,  கோல்டி ப்ராரை பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு இந்தியாவிலுள்ள கனேடிய தூதரகத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றவாளியை பற்றிய சரியான தகவல் தருபவர்களுக்கு 1.5 கோடி சன்மானம் என கனடா அரசு அறிவித்துள்ளது.

இரண்டு கொலை வழக்கு

கோல்ட் ப்ரார் கனடா பொலிஸாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி என்பதால், இந்திய காவல்துறை இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடர வேண்டுமென இந்தியாவிலுள்ள கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி நபர்: தகவல் கொடுத்தால் 1.5 கோடி சன்மானம் | Canada Goldy Brar On Most Wanted Reward 15 Crore@india today

கோல்ட் ப்ரார் மீது எந்த குற்ற வழக்கு இல்லையென்றாலும், அவர் பஞ்சாப் பாடகரின் கொலை வழக்கு பற்றிய விசாரணையில் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறார்.

மேலும் பிரபல ரவுடியான ப்ரார் கனடாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சித்து மோசி வாலா என்பவரது கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட ரவுடி கும்பலில் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.