காணாமல் போன மீனவர்… முதலையின் வயிற்றில் இருந்த உடல் பாகங்கள்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

ஈரகுலையை நடுங்க வைக்கும் இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில்தான் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லேண்ட்டில் உள்ள உப்பு நீர் ஏரி பகுதியில் கடந்த சனிக்கிழமை குழுவாக சிலர் மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் ஒருவர் கெவின் டார்மெடி. 65 வயதான கெவின் டார்மெடி பல வருடங்களாக மீன் பிடி தொழிலில் இருந்து வருகிறார்.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்

அப்போது திடீரென கெவின் டார்மெடி கூச்சலிடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து உடன் வந்தவர்கள் சத்தம் கேட்ட திசையில் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பெரிய அளவில் தண்ணீர் மேலே தெளித்துள்ளது. ஆனால் அங்கே கெவின் டார்மெடி இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லையாம்.

Anbumani: சலுகையுடன் விற்கப்படும் கள்ளச்சாராயம்… அரசு வேடிக்கை பார்க்கிறதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

இதையடுத்து கெவின் டார்மெடியை காணவில்லை என உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு நாட்களாக அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த ஏரியில் முதலைகள் அதிகம் என்பதால் கெவின் டார்மெடியை முதலைகள் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்த இரண்டு பெரிய முதலைகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். அதில் ஒரு முதலை 14 அடி நீளமும், மற்றொரு முதலை 9 அடி நீளமும் இருந்தது. அந்த இரண்டு முதலைகளுக்கும் பிரேத பரிசோதனை செய்ததில் அவற்றில் வயிற்றில் மனித உடல் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்கே சுரேஷுக்கு இறுகும் பிடி… வங்கி கணக்குகள் முடக்கம்… பரபரப்பு!

இதனை பார்த்த போலீஸ் அதிகாரிகள், இரண்டு முதலைகளும் கெவின் டார்மெடியை கொன்று சாப்பிட்டிருக்கலாம் என்றும் முதலைகளின் வயிற்றில் இருந்த பாகங்கள் கெவினுடையதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முதலைகளின் வயிற்றில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் கெவின் டார்மெடி உடையதுதானா என்றும் சோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வடக்கு ஆஸ்திரேலிய பகுதிகளிர் முதலைகள் என்பது சர்வ சர்வ சாதாரணமான ஒரு விஷயம். ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானவை. குயின்ஸ்லாந்தில் மட்டும் 1985ஆம் ஆண்டு முதல் தற்போது வரை முதலைகளின் தாக்குதல்களால் 13 பேர் மரணமடைந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு போர்ட் டக்ளஸ் பகுதியில் காணாமல் போன ஒரு வயதான பெண் முதலையால் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. கடந்த ஆண்டு, டெயின்ட்ரீ தேசிய பூங்காவில் ஒரு பெண் முதலையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Rain: ஷிஃப்ட்டாகும் மழை… இன்றும் நாளையும் சம்பவம் இருக்கு… வெதர்மேன் தகவல்!

1974 ஆம் ஆண்டு முதலைகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டதிலிருந்து, குயின்ஸ்லாந்தில் முதலைகளின் எண்ணிக்கை 5,000 இருந்து இன்று சுமார் 30,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முதலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.