சென்னை: ஓவர் குடிப்பழக்கத்தால் சினிமா வாய்ப்புகளை தவறவிட்ட அந்த பிரபல நடிகரின் மனைவி சமீப காலமாக போதை பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொண்டு வருகிறார் என ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமாவில் பெயரும் புகழும் கிடைப்பதை விட அதீத பணம் கிடைப்பதால் ஆடம்பர வாழ்க்கையும் சரக்கு பார்ட்டிகளிலுக்கும் அடிக்கடி நடிகர்களும் நடிகைகளும் சென்று வருவதை வாடிக்கையாகி வருகின்றனர்.
ஆனால், அதை ஒரு லிமிட்டில் வைத்துக் கொண்டு சினிமாவில் அதிக ஆர்வத்தை செலுத்துபவர்கள் தான் பெரியளவில் சாதிக்கின்றனர் என்றும் மது போதைக்கும் போதை பொருளுக்கும் அடிமையாகி விடுபவர்கள் அப்படியே ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய் விடுகின்றனர். அப்படித்தான் அந்த பிரபல நடிகரின் மனைவியும் சினிமாவில் இருந்து ஒரேயடியாக வெளியேறினார்.
பிரபல நடிகரின் மனைவி: கணவர் இந்த வயதிலும் டாப் ஹீரோவாக சினிமாவில் கெத்துக் காட்டி வரும் நிலையில், மனைவி பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருக்க காரணமே அவரது குடிப் பழக்கம் தானாம்.
கோடிக்கணக்கில் நடிகர் சம்பாதித்துக் கொட்டுவதை எல்லாம் உலக நாடுகளுக்கு டூர் சென்று வித விதமான ஃபாரீன் சரக்குகளை குடித்து கும்மாளம் போட்டு கணவரின் சொத்தை முழுவதும் கரைத்து வருகிறாராம்.
குடியால் குட்டிச்சுவரான நடிகை: சினிமாவில் நடிக்கக் கூட முடியாத அளவுக்கு சரக்கு போதைக்கு அடிமையான அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஃபீல்டை விட்டே விலகி விட்டார். பிசினஸ் செய்து வருவதாகவும் ஏகப்பட்ட மோசடிகளிலும் அடிக்கடி சிக்கி மட்டிக் கொள்கிறார்.
இந்நிலையில், தற்போது குடியை தாண்டி தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பழக்கத்திற்கும் அந்த முன்னாள் நடிகை அடிமையாகி விட்டார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
போதைக்கு அடிமையான நடிகை: குடிப்பழக்கத்தை தாண்டி சமீப காலமாக அந்த பிரபல நடிகரின் மனை தடை செய்யப்பட்ட போதைக்கு அடிமையாகி வருவதாகவும் நடிகரின் மகன் போதை பொருளுக்கு அடிமையாகவும் அவருடைய அம்மா தான் காரணம் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகருக்கு இந்த விவகாரம் தெரிந்தாலும், மனைவியை மாற்ற முடியாமலும், மனைவியை அடக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார் என்கின்றனர். அவரை கண்டுக்கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டு தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அந்த நடிகர் என்கின்றனர்.