நடிகர் மனோபாலாவின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறப்பு தமிழ் சினிமாவிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பு என திரையுலகினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனோபாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வந்தவர் மனோபாலா. பல ஹிட் படங்களை இயக்கியுள்ள இவர் நடிகராகவும் ஏறக்குறைய சுமார் 700க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார். கல்லீரல் பிரச்சனை காரணமாக பத்து நாட்களாக சிகிச்சை பெற்ற இவர் சில தினங்களுக்கு முன்பாக வீடு திரும்பி ஓய்வில் இருந்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார் மனோபாலா. அவரின் மறைவிற்கு திரையுகை சார்ந்த பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிறந்த இயக்குனராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிர்ந்த்னாலை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு அவர் பாரட்டி பேசியது இந்த தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
Manobala Son: என் அப்பாவுக்கு நீங்க தான் உயிர்.. கலங்கிய நடிகர் மனோபாலாவின் மகன்.!
திரு. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரையுலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அதே போல் இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், என்னிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த நண்பர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். எல்லா காலங்களிலும் என்னை சந்தித்து வந்தார். என்னை பார்ப்பதற்காக நான் வீட்டில் இருந்து கிளம்பிய உடனே கோடம்பாக்கம் வந்து காத்திருந்து பார்ப்பார் என மனோபாலா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இதே போல் திரையுலக பிரபலங்கள் பலரும் மனோபாலா குறித்த தங்களின் நியாபகங்களை பகிர்ந்து வருவது ரசிகர்களை கலங்க செய்து வருகிறது.
விவாகரத்து கிடைத்ததை வேறலெவலில் கொண்டாடிய நடிகை: தீயாய் பரவும் போட்டோஸ்.!