வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன் : பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பக்கிங்ஹாம் அரண்மணை விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ், பிரிட்டன் மன்னராக வரும் 6-ம் தேதி முடிசூடப்பட உள்ளார். லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில் நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். பிரிட்டன் அரசக் குடும்பத்தில், ராணியர் அணியும் கோஹினூர் வைர கிரீடத்தை மூன்றாம் சார்லஸ் மனைவி கமீலா அணிவது தவிர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முடிசூட்டும் விழாவிற்காக ரூ. 1000 கோடி வரை அரசு செலவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பக்கிங்ஹாம் அரண்மணை விழா கோலம் பூண்டுள்ளது. சர்வதேச டி.வி. சேனல்கள் முடிசூட்டு விழா நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement