சோசியல் மீடியாவில் தற்போதைய டிரெண்டிங்கான டாபிக் சீரியல் நடிகையின் விவாகரத்து போட்டோ ஷுட் தான். இதுசரி என்று ஒரு பக்கமும், தவறென்று மற்றொரு பக்கமும் விவாதங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் பிக்பாஸ் காஜல் பசுபதி இந்த டைவர்ஸ் போட்டோ ஷுட் குறித்து தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பிரபல நடிகர், நடிகைகள் போல் பலரும் போட்டோ ஷுட் நடத்தும் கலாச்சாரம் பெருகி வருகிறது. திருமணம், வளைகாப்பு, கல்யாணத்துக்கு முந்தைய போட்டோ ஷுட் என புகைப்படங்கள் எடுப்பது டிரெண்டாகி வருகிறது. இதில் ப்ரீ வெட்டிங் போட்டோஷுட் அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்புவதும் வழக்கம். இந்நிலையில் தான் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கொண்டாடும் விதமாக போட்டோஷுட் நடத்தியுள்ளது இணையத்தில் பல விவாதங்களை கிளப்பி வருகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சின்னத்திரையில் ஜி தமிழில் ஒளிப்பரப்பான ‘முள்ளும் மலரும்’ என்ற சீரியல் தொடர் மூலம் பிரபலமான ஒருவர் ஷாலினி. சீரியல்களில் மட்டுமில்லாமல் ‘சூப்பர் மாம்’ உள்ளிட்ட சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் ஷாலினி கலந்துக்கொண்டுள்ளார். இவர் தனக்கு ரசிகராக அறிமுகமான ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
‘பொன்னியின் செல்வன் 2’ குட்டி குந்தவை இந்த பிரபலங்களின் மகளா.?: தீயாய் பரவும் தகவல்.!
இந்நிலையில் திருமணத்திற்கு பின் ரியாஸ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி வந்தார். பெண் குழந்தை பிறந்த பிறகும் இதே நிலைமை தொடர்ந்ததால் ரியாஸை விவாகரத்து செய்துள்ளார் ஷாலினி. இதனை கொண்டாடும் விதமாக போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார் ஷாலினி. இது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விவாகரத்து கிடைத்ததை வேறலெவலில் கொண்டாடிய நடிகை: தீயாய் பரவும் போட்டோஸ்.!
இந்த புகைப்படங்களில் தனது கணவர் போட்டோவை காலில் போட்டு மிதிப்பதை போன்று ஷாலினி போட்டோ ஷுட் நடத்தியுள்ளது பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்தை செலிபிரேட் செய்தது எல்லாம் ஓகே. ஆனால் முன்னாள் கணவர் போட்டோவை காலில் போட்டு மிதிக்கும் அளவிற்கு வெறுப்பை விதைக்காமல் இருந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை காஜல் பசுபதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷாலினியின் விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்களை பகிர்ந்து, இதுதான் உண்மையான் ஸ்பிரட் என பாராட்டியுள்ளார். அவரின் இந்த பதிவிற்கும் நெட்டிசன்கள் மத்தியில் ஏராளமான கருத்துக்கள் தற்போது குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by KAAJAL PASUPATHI �� OFFICIAL �� (@kaajal_pasupathi__official)