டெல்லியின் குரோஜி காஸ் பகுதியில் உள்ள சாலையில் திடீரென ரட்சத பள்ளம் ஏற்பட்டதால் அவ்வழியே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பள்ளம் ஏற்பட்டதும் அந்த பகுதியில் பேரிகார்டுகளை அமைத்து போக்குவரத்தை மாற்றுப் பாதைக்கு போலீசார் திருப்பி விட்டனர். இதனால் அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி தெற்கு டெல்லியில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.