டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் முன்பு பாஜகவினர் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை மறுசீரமைப்பு செய்ய கொரோனா காலக்கட்டத்தில், 45 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கெஜ்ரிவால் வசித்து வரும் வீடு 1942ம் ஆண்டில் கட்டப்பட்டது என்பதால் தற்போது புதுப்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியினர், துணைநிலை ஆளுநரின் வீட்டை புதுப்பிக்க இதைவிட அதிகமாக செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.