தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை அலர்ட்!

விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. வரும் 5ம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

படத்தின் டிரைலரில் கேரளாவில் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்றும், பெண்களை மதமாற்றம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து இருப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது உண்மை கதை என்றும் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் நடக்கவில்லை என்றும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் கண்டனம் கிளம்பியது.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் கேரளாவில் வெறுப்பு பிரிவினை வாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த படத்தை எடுத்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 10 சர்ச்சை காட்சிகளை தணிக்கை குழு நீக்கி ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் நாளை மறுநாள் (மே 5) திரைக்கு வரும் நிலையில், கேரளாவில் தடை செய்யப்படுமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.