திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ள கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பிராட் மற்றும் விட்னி நிறுவனத்திடம் இருந்து விமானங்களுக்கு தேவையாக எஞ்சின் உள்ளிட்ட பாகங்களை வாங்க கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் ஒப்பந்தப்படி எஞ்சின் பாகங்களை அமெரிக்க நிறுவனம் உரிய நேரத்தில் வழங்காததால் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்க முடியாத நிலை உருவானதாகவும், அதன் விளைவாக பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ள கோ ஃபர்ஸ்ட் நிறுவனம், வரும் 5ஆம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் அந்நிறுவன விமானங்கள் டெல்லியில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் அந்நிறுவன டிக்கெட் கவுன்ட்டர்கள் வெறிச்சோடி உள்ளது.