தேசிய கல்வி கொள்கை ரத்து: காங்., அதிரடி வாக்குறுதி| Repeal of National Education Policy: Congress, promises action

பெங்களூரு, : ‘தேசிய கல்வி கொள்கை ரத்து; நீர்ப்பாசன திட்டத்தில் மேகதாது திட்டத்துக்கு 9,000 கோடி ரூபாய்; ஐந்து ஆண்டுகளில் முக்கிய நதிகளை சுத்தம் செய்ய 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.

காங்., தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 கர்நாடகாவில் இருந்து மத்திய அரசுக்கு வழங்கப்படும் மொத்த வரி வசூலில், மாநிலத்துக்கு தேவையான வரி வசூலிக்க நடவடிக்கை

 கடந்த 2006 முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களை, பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர்க்க நடவடிக்கை

 போலீஸ் துறையில் திருநங்கையருக்கு 1 சதவீத இடஒதுக்கீடு

 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, மாதந்தோறும் 5,000 ரூபாய் சிறப்பு நிதி

 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், பா.ஜ., இயற்றிய, மக்களுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்படும்

 ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் அதிவிரைவு ‘வைபை’ வசதி

 பெங்களூரின் ‘டெண்டர் ஷ்யூர்’ சாலை போன்று, 10 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களில் இதே திட்டம் அமல்படுத்தப்படும்

 குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, அவர்களின் பெயரில் பட்டா வழங்கப்படும். அத்துடன் குடிசை பகுதிகள் ‘ஷார்மிகா வசதி சமுசயா’ என பெயர் மாற்றப்படும்

 கிருஷி சர்வோதயா நிதி திட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் விவசாயத்தை நவீனமாக்கவும், மானியம், கடன் மற்றும் காப்பீடுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

 விவசாயம் தொடர்பான உற்பத்தி மற்றும் அதை சார்ந்த துறைகளில் ‘ஸ்டார்ட் அப்’கள், புதுமைகளை ஊக்குவிக்க 500 கோடி ரூபாய் கடன்

 காலை நேரங்களில் விவசாயிகளுக்கு எட்டு மணி நேரம் மும்முனை மின்சாரம் வினியோகம்

 இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு 2,500 கோடி ரூபாய் முதலீடு

 பெங்களூரு, ராம்நகர், சிக்கபல்லாபூரில் மலர் வளர்ப்பு வளர்ச்சிக்கு 500 கோடி ரூபாய்க்கு சிறப்பு பாக்கேஜ்

 பால் உற்பத்தியாளர்களுக்கு ஐந்து முதல் ஏழு ரூபாய் வரை மானியம் அதிகரிப்பு

 அனைத்து கிராமங்களிலும் பசு சாணத்தை பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டு, கிலோ மூன்று ரூபாய்க்கு வாங்கப்படும்

 மீனவர்கள் வருவாய் அதிகரிக்க ஐந்து ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அமல்படுத்தல்

 நீர்ப்பாசன திட்டத்தில் மேகதாது திட்டத்துக்கு 9,000 கோடி ரூபாய்; மகதாயி திட்டத்துக்கு 3,000 கோடி ரூபாய் உட்பட 2023 முதல் 2028 வரை 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும்

 ஐந்து ஆண்டுகளில் முக்கிய நதிகளை சுத்தம் செய்ய 1,000 கோடி ரூபாய்

 சுற்றுலா துறை வளர்ச்சி அடைய செய்ய 5,000 கோடி ரூபாய்

 இரண்டு ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் 50 சதவீத பஸ்கள் மின்சார பஸ்களாக மாற்றப்படும்

 தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்து விட்டு, மாநில கல்வி திட்டத்தை அமைத்தல்

 2,500 அரசு பள்ளிகள் ‘ஸ்மார்ட்’ பள்ளிகளாக மாற்றப்படும்

 தாலுகா அளவில் 20 படுக்கைகள், மினி அறுவை சிகிச்சை மையத்துடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீரமைப்பு

 லிங்காயத், ஒக்கலிகர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு, மீண்டும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும்

 பி.யு.சி., படிக்கும் எஸ்.சி., – எஸ்.டி., சமுதாய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

 நெசவாளர்கள் தங்கள் நெசவு தறியை நவீனமாக்க, ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய்

 காஷ்மீரில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களுக்காக, 15 கோடி ரூபாயில் காஷ்மீர் கலாசார மையம்

 திருநங்கை நல வாரியம் அமைத்து, 200 கோடி ரூபாய் வழங்கப்படும்

 25 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள், 10 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு

 ஆட்டோ ஓட்டுனர்கள் வாரியம் மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் நல வாரியம் அமைத்து, தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 மூத்த குடிமக்கள், கர்நாடகாவின் 15 ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.