தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகரான சரத்பாபு இன்று உடலநலக்குறைவால் காலமானதாக பரவிய வதந்தியை அடுத்து அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
1951 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த சரத்பாபு சிறுவயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் அவரது தந்தை சரத்பாபு தொழிலதிபர் ஆகவேண்டும் என்றுதான் விரும்பினாராம். இந்நிலையில் சரத்பாபவின் தாய் அவருக்கு பக்கபலமாக இருந்தாராம்.
Manobala: மனோபாலாவின் வாழ்நாள் ஆசை இதுதானாம்..கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதே..!
இதைத்தொடர்ந்து நடிகராகவேண்டும் என முழுமூச்சாக இறங்கிய சரத்பாபு 1973 ஆம் ஆண்டு வெளியான ராமராஜ்யம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் என்ற படம் தான் சரத்பாபுவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வர துவங்கினார். குறிப்பாக ரஜினியுடன் இவர் நடித்த முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து ஆகிய படங்கள் சரத்பாபுவை ஒரு நடிகராக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது.
அண்ணாமலை படத்தில் ரஜினிக்கும் இவருக்கும் இடையேயான காட்சிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றது.. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்டாக நடித்து அசத்தக்கூடிய சரத்பாபு கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகியே இருந்தார்.
கடைசியாக தமிழில் சூர்யா நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் சரத்பாபு. அதன் பின் ஒரு சில தெலுங்கு படத்தில் நடித்த சரத்பாபு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எனவே வெளியே எங்கும் செல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார் சரத்பாபு
இந்நிலையில் இவர் தற்போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக செய்திகள் பரவ துவங்கின. எனவே பல திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு இரங்கல் தெரிவிக்க தற்போது இவரது சகோதரி விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி சரத்பாபு தற்போது வரை சிகிச்சை பெற்று தான் வருகின்றார். எனவே அவரின் உடல்நிலை பற்றி பரவும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து இவருக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் அவர்களின் பதிவை நீக்கியுள்ளார்.மேலும் அவரின் உடல்நிலை சரியாக அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்