நீங்கள் ஐபோன் பிரியரா ? அமேசான் கிரேட் சம்மர் 2023 விற்பனையில் இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) விற்பனை செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்றிரவு மே 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் கிரேட் சம்மர் சிறப்பு விற்பனையின் போது, ஐபோன் 14 மாடலை ரூ.40,000 க்கும் குறைவான விலையில் வாங்க முடியும்.
ரூ.79,990 க்கு அறிமுகமான ஐபோன் 14 மீது அமேசான் வலைதளம் ரூ.9,901 என்கிற ஃபிளாட் ஆஃபரை (Flat Offer) அறிவித்து உள்ளது. இதன் மூலம் ஐபோன் 14-ன் விலையானது ரூ.69,999 ஆக குறைந்துள்ளது.
இப்போ அந்த பிரீமியம் ஸ்மார்ட்போனை நாம் 39,293 ஆயிரம் ரூபாய்க்கு பெறலாம். எப்படி தெரியுமா ?
இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை 79,900 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. Amazon சலுகையாக 66,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
அதனை தொடர்ந்து ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கிகளுக்கான ரூ.375 என்கிற பேங்க் ஆஃபர் (Bank Offer), அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டிற்கான ரூ.2,331 கேஷ்பேக், ரூ.5,000 அமேசான் பே ரிவார்ட்ஸ் (Amazon Pay Rewards) மற்றும் உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் ஏதாவது இருந்தால் அதற்கு அதிகபட்சமாக 20,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலும் அனைத்து சலுகைகளுடன் சேர்த்து நீங்கள் இதை 39,293 ரூபாய்க்கு பெறமுடியும்.மேலும் இதுவொரு அமேசான் ப்ரைம் எக்ஸ்க்ளூஸிவ் ஆஃபர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.