அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு செல்லும் இடமெல்லாம் பின்னடைவாக ஏற்பட்டு வரும் நிலையில் அந்த அணி பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க தொடங்கியுள்ளதோ என்ற கேள்வியை சமீபத்திய நிகழ்வுகள் உருவாக்கியுள்ளன.
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே தீர்ப்பு அமைந்தது. பொதுச் செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிபடுத்திவிட்டு வந்துள்ளனர்.
மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு திருச்சியில்
தரப்பு நடத்திய மாநாடும் பெரியளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.
இந்த சூழலில் ஓபிஎஸ் தரப்பு பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க தயாராகிவிட்டதோ என்பதை சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.
சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தது யாராக இருந்தாலும் அவர்கள் கண்டனத்திற்கு உரியவர்கள் என்றார். இதன் மூலம் பாஜகவுக்கு போகிற போக்கில் ஒரு குட்டு வைத்தார்.
கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி, “அதிமுக ஆட்சியின்போது ஊழல்வாதிகள் என கூறியவர் அமித்ஷா. தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் ரெய்டு உள்ளிட்டவற்றை செய்து காட்டியவர் அமித்ஷா. ஆனால் இன்று ஊழல்வாதிகளாக குற்றம்சாட்டப்பட்டவர்களுடனே அமர்ந்து பேசியிருப்பது நியாயம் தானா?
கர்நாடகா சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் எங்களை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா கட்சிகள் ஆதரவை கேட்டு வருகின்றன. ஓபிஎஸ் அவர்கள் அறிவித்தால்
கட்சிக்கும் அதிமுக ஆதரவு வழங்கிட தயார்” என்றார்.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என புகழேந்தி பேசியிருப்பதால் ஓபிஎஸ் வேறு பாதையை தேர்ந்தெடுத்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.