பிரான்ஸில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு தொடர்பில் வெளிவரும் தகவல்


பிரான்ஸில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரான ரத்மலானை குடு அஞ்சு தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரான்ஸில் வைன் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் டுபாயில் தண்ணீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பல வர்த்தகங்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடு அஞ்சு பிரான்சில் அகதியாக வாழ்ந்து வருவதாகவும், அதனால் இந்த தொழிற்சாலை வேறு ஒருவரின் பெயரில் நடத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு தொடர்பில் வெளிவரும் தகவல் | Kudu Anju S Property Details

டுபாயில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை, ஆரோக்கிய மையம், உணவகம், கட்டிட வளாகம் என பல நிறுவனங்களும் உள்ளதாக அந்நாட்டின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டிட வளாகத்தை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என நம்பப்படும் பதுவிட்ட சாமர டுபாய் நாட்டில் தலைமறைவாக உள்ள பட்டுவிட்ட சாமர மற்றும் கல்கிசை ஜுட் என்பவரும் குடு அஞ்சுவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தொடர்புப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் https://tamilwin.com/article/bring-kudu-anju-from-france-to-sri-lanka-1683038096குடு அஞ்சுவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.