பெலாரஸில் உயிரிழந்த இலங்கை மருத்துவ மாணவனின் மரணத்தில் மர்மம் – விசாரணைகள் ஆரம்பம்



பெலாரஸில் பல்கலைகழகத்தில் இலங்கை மருத்துவ மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Grodno State Medical பல்கலைகழகத்தில் கல்வி கற்ற 24 வயதுடைய மருத்துவ மாணவரான திஷான் குலரத்ன என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்ற இந்த மாணவன் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து வைத்தியராக வேண்டும் என்ற நோக்கத்தில் பெலாரஸில் உள்ள Grodno பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார்.

இறக்கும் போது அதே பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்ற இந்த மாணவன் முதலாம், இரண்டாம், மூன்றாம் வருடங்களில் வருடத்தின் சிறந்த மாணவருக்கான விருதை வென்றிருந்தார்.

இம்மாணவன் பாடசாலைக் காலத்தில் பாடசாலையின் பிரதி மாணவர் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளிலும் திறமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து அவர்களுடன் மிகவும் நட்புடன் பழகியுள்ளார். மாணவனின் தாயார் தனது மகனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தபோது, ​​அவர் அழைப்புக்கு பதிலளிக்காததாலும், ஏனைய மருத்துவ மாணவர்கள் சிலரை அழைத்து மகன் தொடர்பில் தகவல் பெற கோரிக்கை விடுத்துள்ளார்.

சக மருத்துவ மாணவர்கள் அவர் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று தேடியபோது இந்த மருத்துவ மாணவனின் உயரமான அலுமாரியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என பெலாரஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணருவதற்காக அந்நாட்டு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன் கடந்த 29ஆம் திகதி இரவு சுமார் 11.00 மணி வரை தனது கைத்தொலைபேசியை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.