ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இயக்குரும், நடிகருமான மனோபாலாவுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்காக சென்னையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மனோபாலா மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வு எடுத்து வந்தார்.
வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
இந்நிலையில் அவர் இன்று தன் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக மனோபாலாவுக்கு நெஞ்சுவலி வருவதும் போவதுமாக இருந்ததாம். மேலும் மூச்சு விடவும் கஷ்டப்பட்டாராம். அவர் தன் கடைசி நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.
Manobala: பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி
இன்று காலை தன் வீட்டில் ஓய்வு எடுத்தபோது கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவரின் உயிர் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மனோபாலா பற்றி ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.
எதுவாக இருந்தாலும் மனோபாலா இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அவருக்கு ஏன் இப்படி ஒரு முடிவு. கடந்த சில மாதங்களாக சக கலைஞர்களின் இறுதி ஊர்வலகங்களில் கலந்து கொண்டு வந்தாரே. போதும் இறைவா என்று வேதனையுடன் கூறினாரே. தற்போது அவரே இப்படி திடீரென்று போய்விட்டாரே என்று தான் ரசிகர்கள் புலம்பித் தவிக்கிறார்கள்.
மனோபாலாவின் பெயரை சொன்னதுமே அவரின் கலகலப்பான பேச்சும், சிரிப்பும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்வார், ஜாலியாக பேசுவார். தன் படங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து அவர்களின் சோகத்தை மறக்க வைத்தார்.
இப்படி ஒரு ஜாலியான மனிதருக்கு திடீர் மரணமா என்று தான் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர்களாக வரிசையாக இப்படி திடீர் திடீரென்று மரணம் அடைந்து வருகிறார்களே. இது என்ன இறைவா என ரசிகர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மனோபாலாவுக்கு 69 வயது என்றே நம்ப முடியாத அளவுக்கு இளமையாக இருந்தார். இந்த வயதிலும் எப்படி சார் இப்படி சூப்பராக முடியை மெயின்டெய்ன் செய்கிறீர்கள் என்று ரசிகர்கள் பலர் கேட்டு வந்தார்கள். ஜாலியாக ட்வீட் செய்து வந்தவர், மயில்சாமி இறந்த பிறகு பழைய புகைப்படங்களாக வெளியிட்டு வந்தார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஏதோ பழைய நினைப்பில் புகைப்படங்களை வெளியிடுகிறார் போன்று என அனைவரும் நினைத்தார்கள். இந்நிலையில் அவர் மரணம் அடைந்த செய்தி அறிந்தவர்களோ, ஒரு வேளை அடுத்தது நாம் தான் என மனோபாலாவுக்கு தெரிந்திருக்குமோ, அதனால் தான் பழைய புகைப்படங்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டாரா என தற்போது பேசுகிறார்கள்.
ஹேட்டர்ஸ் இல்லா நடிகராக இருந்த மனோபாலாவின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறைவா இத்துடன் நிறுத்திக்கொள் போதும், எங்களால் இனியும் தாங்க முடியாது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்த மனோபாலா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.