மறைந்த பீட்டர்பாலை நான் ஒருபோதும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை

இரண்டு முறை விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கொரோனா லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி பீட்டர்பாலை எளிமையாக திருமணம் செய்துகொண்டார். அதன்பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் பீட்டர் பாலுக்கு இருந்த குடிப்பழக்கம்தான் என தகவல் வெளியானது. அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில், பீட்டர்பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பீட்டர்பாலின் மனைவிக்கு இரங்கல் கூட தெரிவிக்காத நடிகை வனிதா, இன்ஸ்டா பக்கத்தில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மறைந்த பீட்டர்பாலை நான் ஒருபோதும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தோம். அது அதே ஆண்டே முடிவடைந்துவிட்டது. நான் பீட்டர் பாலின் மனைவி அல்ல. அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.