வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று (மே.04) போராட்டக்காரர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தன.
இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின், பாலியல் தொடர்பாக விசாரிக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது
பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மீண்டும் கடந்த ஏப். 23-ல் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டம் காரணமாக பூஷன் சரண் சிங் மீது டில்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட இரு வழக்குகள் பதிந்தனர்.
இதனையும் ஏற்க மறுத்த போராட்டக்கார்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (மே.04) இரவு திடீரென சில நபர்கள் போராட்டக்காரர்களிடம் அத்துமீறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு வன்முறை சம்பவம் நடந்தது.
வந்திருந்த நபர்கள் சீருடை அணியாத டில்லி போலீசார் எனவும். அவர்கள் அனைவரும் மது அருந்தி விட்டு வந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அமைதி வழியில் போராட்டம் நடத்தும் எங்கள் மீது போலீசார் அத்துமீறுவதாக போராட்டக்காரர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement