மாமரத்தில் தொங்கிய ஒரு கோடி ரூபாய்… எப்படி வந்தது தெரியுமா? கர்நாடக தேர்தல் களத்தில் பகீர்!

கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரபல தொழிலதிபர் சுப்ரமணிய ராய் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது வீட்டின் முன்புறமிருந்த மாமரத்தின் மீது சில மூட்டைகள் இருந்துள்ளன. அதை திறந்து பார்த்தால் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கட்டுக் கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

பண மூட்டை சிக்கியது

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கிருந்த வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தனர். ஆனால் தங்களுக்கு எதுவும் தெரியாது என முதலில் கூறினர். பின்னர் மூட்டையை கொண்டு வந்து வைத்த நபரை அடையாளம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீட்டின் உரிமையாளர் சுப்ரமணிய ராய் என்பவர் புத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அசோக் குமார் ராயின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு தெற்கு தொகுதி: தகறும் பாஜக கனவு கோட்டை? ’ரெட்டி’யை வச்சு JDS ஆடும் பவர்புல் கேம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

எனவே காங்கிரஸ் கட்சியினர் தான் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பண மூட்டையை கொண்டு வந்து வைத்ததாக தெரிகிறது. வரும் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு குறி

கர்நாடக மாநிலம் முழுவதும் நடத்தி வரும் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கரன்சிகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஆளுங்கட்சியாக பாஜக இருப்பதால் எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரெய்டு அஸ்திரங்கள் அதிக அளவில் ஏவப்படுகின்றன. அதிலும் காங்கிரஸ் கட்சியை கட்டம் கட்டி திட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023: பாஜக தேர்தல் அறிக்கை.. சும்மா அடிச்சு விடக்கூடாது.. சித்தராமையா பொளேர்.!

தீவிர தேடுதல் வேட்டை

ஏனெனில் கருத்துக்கணிப்புகளும், கள நிலவரமும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி சிட்டி மார்க்கெட் ஏரியாவில் ஆட்டோ ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸிற்கு தலைவலி

மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கங்காதர் கவுடா, அவரது மகன் ரஞ்சன் கவுடாவிற்கு சொந்தமான தக்‌ஷின கன்னடாவின் பெல்தங்கடி கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரியல் எஸ்டேட் நிறுவனமான அங்கிதா பில்டர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர் நாராயண் ஆச்சாரியா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.