பிரிட்டன் மன்னர் சார்லஸ், முடிசூட்டு விழாவின் போது அணியவிருக்கும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தங்கத்திலான ஆடைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வருகிற 6ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. அதில் மன்னர் சார்லஸ் இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஆடைகளை அணியவிருக்கிறார்.
இதில் ஒரு ஆடை 1821ம் ஆண்டு அப்போதைய மன்னர் 4ம் ஜார்ஜுக்காகவும், மற்றொன்று 1911ம் ஆண்டு மன்னர் 5ம் ஜார்ஜுக்காகவும் வடிவமைக்கப்பட்டது.
இந்த ஆடைகளை ராணி எலிசபெத் அவரது முடிசூட்டு விழாவின் போது அணிந்திருந்த நிலையில், 70 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஆடைகள் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பயன்படுத்த தயாராகி வருகின்றன.