தொலைத்தொடர்பு துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஜியோ தனது எல்லையை அடுத்தடுத்து விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. இப்போது புதியதாக யாரும் எதிர்பார்க்காத ஹைடெக் ஹெட்செட் ஒன்றை களமிறக்கியிருக்கிறது. அது, ஜியோ டிரைவ் விஆர் ஹெட்செட் (JioDrive VR Headset) சாதனமாகும். ஸ்மார்ட்போன் அடிப்படையிலான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் சாதனமான இது ஜியோவின் முதல் விஆர் ஹெட்செட் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஜியோசினிமா ஆப்ஸ் இல் டெலிகாஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் TATA IPL 2023 போட்டியை இனி VR அனுபவத்துடன் கண்டுகளிக்கலாம்.
அதாவது 360 டிகிரியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து உங்களால் ரசிக்க முடியும். இதன் விலை என்ன? சிறப்பம்சங்கள் என்ன? எங்கு கிடைக்கும் என்பது உள்ளிட்ட தகவல்களை இனி பார்க்கலாம். இந்த ஹெட்செட்டை ஜியோ எதற்காக அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றால், மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கக்கூடிய அனுபவத்தை இந்த ஹெட் வாடிகையாளர்களுக்கு கொடுக்கும். பார்வையாளர்கள் 100 இன்ச் விர்ச்சுவல் டிஸ்பிளேவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண்பது போன்ற அனுபவத்தைப் பெறலாம் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
ஜியோ டிரைவ் ஹெட்செட் 4.7 மற்றும் 6.7 இன்ச் டிஸ்பிளே அளவுகள் கொண்ட ஃபோன்களுடன் இணக்கமானது. இந்த டிஸ்பிளே போன்களில் சிறப்பாக செயல்படும். JioDrive VR Headset சாதனத்தின் சிறந்த செயல்திறனுக்காக, உங்கள் போனில் கைரோஸ்கோப் மற்றும் ஆக்சிலோமீட்டர் போன்ற அம்சங்கள் இருந்தால் இன்னும் நல்ல அனுபவத்தை பெறலாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்களும் உபயோகிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
ஆண்டராய்டு வெர்சன் 9க்கு மேல் வைத்திருப்பவர்கள், ஐபோனில் iOS 15 அல்லது அதற்கு மேல் இருக்கும் சாதனங்களில் இந்த ஹெட்செட் சிறப்பாக வேலை செய்யும். இதுமட்டுமல்லாமல், விஆர் கேமிங், எண்டர்டெயின்மெண்ட், கோச்சிங், மூவிஸ், சீரிஸ் போன்ற பிற VR அனுபவங்களுக்காகவும் நீங்கள் இந்த JioDrive VR Headset-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோஇம்மர்ஸ் (JioImmerse) ஆப்ஸ் இதற்காக பிரத்யேகமாக ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஜியோவின் டிரைவ் விஆர் ஹெட்செட் விலையை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், மிக மிக குறைவான விலையில் கிடைக்கது. வெறும் 1,299 ரூபாய்க்கும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ நிறுவனம். ஜியோ மார்ட் தளத்தில் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 3 மாதம் வாரண்டி இருக்கிறது.