ஐபிஎல் 43வது லீக் போட்டியில் பெங்களூர் அணி லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.போட்டியின் ஆரம்பத்திலும், முடிவிலும் ஆக்ரோஷமாக காணப்பட்ட விராட் கோலி லக்னோ வீரர்களை கடுமையாக சாடி வந்தார்.
கடந்த போட்டியில் லக்னோ அணி பெங்களூரிடம் வெற்றி பெற்றபோது கொண்டாட்டத்தில் எல்லை மீறினார்கள். ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தூக்கி எறிவதும், கம்பீர் அமைதியாக இருக்கவும் என ரசிகர்களை பார்த்து கூறியது பெரும் விவாதமாக மாறியது.
இதற்கு பதிலடி தரும் விதமாக விராட் கோலி மகிழ்ச்சியை வெளிப்படுத்த அப்படி செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கவுதம் கம்பீர், விராட் கோலி இடையே பெரிய வாக்குவதம் நடக்க சக வீரர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.ஐபிஎல் நிர்வாகமும் விதிகளை மீறியதாக கோலிக்கும், கம்பீருக்கும் 100 சதவீதம் அபராதமும் விதித்தது.சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய விராட்கோலி, இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷல் ஆனது, லக்னோவை வீழ்த்தியது மகிழ்ச்சி.லக்னோவில் எங்களுக்கு ரசிகர்கள் கூடியது பிரமிப்பாக இருந்தது. எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.தொடர்ந்து இதுபோன்று ஆக்ரோஷமாக விளையாடுவோம் எனவும், குறிப்பாக லக்னோவை குறிவைத்து தாக்கும் விதமாக தங்கள் அணி வீரர்களிடையே பேசும்போது நீங்கள் ஒன்று கொடுக்க நினைக்கிறீர்கள் என்றால் அதை திருப்பிப் பெற்றுக் கொள்ள தயாராக இருங்கள். இல்லையென்றால் அதை செய்யாதீர்கள் என கம்பீரை மறைமுகமாக சாடி உள்ளார்.