தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் குடிமகன் ஒருவர் போதையில் படுத்து உறங்கியதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்காமலேயே திரும்பிச்சென்றனர்.
உடன்குடி மெயின் பஜாரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்று உள்ளது. இதன் அருகே அரசு மதுபான கடைகளும் அமைந்துள்ளதால் நாள்தோறும் ஏராளமான குடிமகன்கள் ஏடிஎம் வாசலிலேயே மது அருந்தும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
இதனால் ஏடிஎம்மிற்கு செல்லக்கூடிய அச்சப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு வாசலில் இருந்து மது அருந்திய குடிமகன் ஒருவர் கோடை வெயிலின் தாக்கம் தாங்காமல் முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த ஏடிஎம் சென்டர் குள்ளேயே சென்று உறங்கியுள்ளார் இதனால் அங்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்காமலேயே திரும்பிச் சென்றனர்.