தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 6ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் கூறியிருந்த நிலையில், 8ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்துள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மே 6ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது என்றும், அதில் இருந்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ஏற்கனவே வானிலை மையம் கணித்திருந்தது.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்த இந்திய வானிலை மையம், தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் 6ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று கூறியது.
உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மே 8ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என தற்போது வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
newstm.in