ஹிந்து கடவுள் அவமதிப்புக்கு ஸாரி சொன்னது உக்ரைன்| Ukraine apologizes for insulting Hindu god

கீவ்: ஹிந்துக் கடவுள் மகா காளியை அவமதிக்கும் வகையில் உக்ரைன் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இதற்கு உக்ரைன் அரசு ‘ஸாரி’ தெரிவித்து உள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நடக்கிறது.

இந்நிலையில் உக்ரைன் ராணுவ அமைச்சகம் அதன் சமூக வலைதளத்தில் எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்து புகை மேலே எழும்பும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதற்கு அருகிலேயே அந்த படத்தை வைத்து மகா காளியின் உருவத்தை ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் பிரசித்தி பெற்ற புகைப்படம் போல் மாற்றம் செய்து மற்றொரு புகைப்படமும் வெளியிட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உக்ரைன் அரசுமன்னிப்பு கேட்க வேண்டும் என உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள்வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில்உக்ரைன் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் எமின் ஸபரோவா நேற்று கூறியதாவது: உக்ரைன் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட புகைப்படம் ஹிந்துகடவுள் மகா காளியை அவமதிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டு இருந்ததாக பலரும் கருத்துதெரிவித்துள்ளனர். இதனால் ராணுவ அமைச்சகத்தின் சமூக வலைதளத்திலிருந்து இந்த படம் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டதற்காக வருந்துகிறோம். தனிச்சிறப்பு வாய்ந்த இந்திய கலாசாரத்தை உக்ரைன் மிகவும் மதிக்கிறது.இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு வழக்கம் போல்தொடரும் என உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அவர்கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.