BS-VI Phase 2 மாசு உமிழ்வுக்கு இணைங்க OBD2 மேம்பாடு பெற்ற ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளின் விலை ₹ 2,000 முதல் ₹ 6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் பாகங்கள் புதுப்பிக்கப்பட்டு NVH மேம்படுத்தப்பட்டுள்ளது.
மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகளில் ஜாவா, ஜாவா 42, ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக், அடுத்து யெஸ்டி ரோட்ஸ்டெர், ஸ்கிராம்பளர் மற்றும் அட்வென்ச்சர் மாடல்கள் உள்ளன.
2023 Jawa and Yezdi Bikes Price List
மாசு உமிழ்வு மேம்பாடு தவிர, சிறந்த NVH (Noise Vbration and Harness) வழங்குவதற்காக என்ஜின் மாற்றியமைக்கப்பட்டு, என்ஜின்களை ரீமேப் செய்து பெரிய த்ரோட்டில் பாடியை கொடுத்துள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எக்ஸாஸ்ட் போர்ட்களும் இப்போது பெரிதாக உள்ளன, மேலும் 42 எக்ஸாஸ்ட் நோட்டை மேம்படுத்த புதிய மஃப்லரை பெற்றுள்ளது. ஜாவா 42 பைக்கில் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் பெறுகிறது.
Model | New Price (ex-showroom, Delhi) | Old Price (ex-showroom, Delhi) | Price Difference |
Jawa 42 Dual Channel (Orion Red, Sirius White ) | 1,96,142 | 1,94,142 | 2000 |
Jawa 42 Dual Channel (Allstar Black) | 1,97,142 | 1,94,142 | 3000 |
Jawa 42 Bobber (Mystic Copper) | 2,12,500 | 2,06,500 | 6000 |
Jawa 42 Bobber (Moonstone White) | 2,13,500 | 2,07,500 | 6000 |
Jawa 42 Bobber (Jasper Red) | 2,15,187 | 2,09,187 | 6000 |
Jawa Perak | 2,13,187 | 2,09,187 | 4000 |
Yezdi Scrambler (Fire Orange) | 2,09,900 | 2,07,900 | 2000 |
Yezdi Scrambler (Bold Black, Yelling Yellow, Outlaw Olive) | 2,11,900 | 2,09,900 | 2000 |
Yezdi Roadster (Smoke Grey, Inferno Red, Glacial White) | 2,06,142 | 2,01,142 | 5000 |
Yezdi Roadster (Crimson Dual Tone) | 2,08,829 | 2,03,829 | 5000 |
Yezdi Adventure (Slick Silver) | 2,15,900 | 2,12,900 | 3000 |
Yezdi Adventure (Mambo Black) | 2,19,900 | 2,14,900 | 5000 |
Yezdi Adventure (Whiteout) | 2,19,942 | 2,14,942 | 5000 |