ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமாக உள்ள Airtel அதன் 365 நாட்கள் அல்லது ஒரு வருட திட்டத்தில் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. நீண்ட நாட்கள் பயனுள்ள திட்டங்களை தேடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
2999 ரூபாய் திட்டம்
இந்த திட்டம் மூலமாக 365 நாட்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் டெய்லி டேட்டா பயன்படுத்தலாம். இதில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா நமக்கு கிடைக்கும். டேட்டா தீர்ந்த பிறகு நமது இன்டர்நெட் வேகம் 64 KBPS என்று குறைந்துவிடும்.
இதில் மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100SMS வசதிகள், அன்லிமிடெட் இலவச 5G டேட்டா போன்ற வசதிகள் உள்ளன. கூடுதல் பலன்களாக 3 மாதங்களுக்கு Apollo 24/7 Circle, 100 ரூபாய் FASTag திட்டம், இலவசமாக Airtel Wynk Music போன்றவை கிடைக்கிறது.
Jio Data Plans: வெயில் காலத்தில் வீட்டில் இருந்தே திரைப்படங்களை பார்க்க சிறந்த 2.5GB டேட்டா திட்டங்கள்!
3359 ரூபாய் திட்டம்
இதில் நமக்கு ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100SMS வசதி, இலவச 5G டேட்டா, 3 மாதங்கள் Apollo 24/7 Circle, ஒரு வருட Disney + Hotstar வசதி, 100 ரூபாய் FASTag, இலவச Wynk Music போன்றவை கிடைக்கிறது.
Jio VR Headset இந்தியாவில் வெளியீடு! ஐபில் 2023 போட்டிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம்!
Airtel நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 3000 ஆயிரம் நகரங்களில் அதன் Airtel 5G Plus சேவையை வழங்குகிறது. மேலும் நம்மிடம் 5G போன் இருந்தால் இலவசமாக Airtel 5G Plus சேவையை பயன்படுத்தமுடியும். நீண்ட நாட்கள் பயன் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்