ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் மனோபாலா 200 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இன்றளவும் பிசியாக நடித்து வந்த மனோபாலா 24 படங்களை இயக்கியும் இருக்கின்றார்.
ரஜினி, விஜயகாந்த், மோகன் என மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தார் மனோபாலா. பின்பு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நட்புக்காக படத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மனோபாலா. அப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்க்கவே அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வந்தன.
Leo: லியோ படத்தில் விஜய்க்காக லோகேஷ் செய்த விஷயம்..தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!
அதைத்தொடர்ந்து முழு நேர நடிகராக உருவெடுத்தார் மனோபாலா. நடிகர், இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மனோபாலா இருந்துள்ளார். இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் H .வினோத்தின் முதல் படமான சதுரங்க வேட்டை படத்தை மனோபாலா தான் தயாரித்திருந்தார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இன்று தன் 69 வயதில் மனோபாலா காலமானது திரைத்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவர்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மனோபாலா இயக்குனராக இருந்தபோது நாள் ஒன்றிற்கு 200 சிகரெட் வரை பிடித்ததாகவும், அதன் பின் மருத்துவரின் அறிவுறுத்தலின் பெயரில் சிகரெட் பழக்கத்தை விட்டதாகவும் கூறியுள்ளார். இதைப்பற்றி ஒரு பேட்டியில்பேசிய மனோபாலா, இயக்குனராக இருந்த காலகட்டங்களில் ஒரு நாளைக்கு 200 சிகரெட் வரை பிடிப்பேன்.
அப்போதெல்லாம் என்னை அனைவரும் சிம்னி என்றுதான் கூறி கிண்டல் செய்வார்கள். தொடர்ந்து சிகரெட் பிடித்ததன் காரணமாக என் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவர் என்னிடம், இனி ஒரு சிகரெட் பிடித்தால் கூட உன் உயிருக்கு ஆபத்து என கூறினார். அதிலிருந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை குறைத்துக்கொண்டேன் என கூறியுள்ளார் மனோபாலா.
இந்நிலையில் மனோபாலா ஒரு சிறந்த நடிகர் மற்றும் இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு மிகசிறந்த மனிதராகவும் இருந்துள்ளதால் அவரின் பிரிவை அவ்வளவு எளிதில் யாராலும் எடுத்துக்கொள்ளமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.