ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலா இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
வாழ்க்கை நிலையில்லாதது என்பது இது தான் போன்று. மனோபாலாவுக்கு இப்படி திடீர் என்று மரணம் வரும் என்று எதிர்பார்க்கவில்லையே என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கடந்த ஒரு மாத காலமாக கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெர்று வந்தார் மனோபாலா. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழ்ந்துவிட்டார். ரசிகர்களை சிரிக்க வைப்பவர்கள் எல்லாம் இப்படி அடுத்தடுத்து திடீர் என்று இறப்பதை நினைக்கும்போதே பயமாக இருக்கிறது என ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் தெரிவித்து வருகிறார்கள்.
நகைச்சுவை நடிகரான மயில்சாமி இறந்தபோது அவரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கொடுமை, கொடுமை என்றார் மனோபாலா. மயில்சாமியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இத்துடன் நிறுத்திக்கொள் ஆண்டவா, போதும், தாங்க முடியாது என்றார். இந்நிலையில் அந்த மனோபாலாவே இன்று இல்லை என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு வந்தவர் பின்னர் நடிகராகவும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். நகைச்சுவை கதாபாத்திரங்கள் அவருக்கு கை கொடுத்தது. தன் நகைச்சுவை காட்சிகளால் நம் கவலை எல்லாம் மறந்து சிரிக்கும்படி செய்தார்.
நிஜத்திலும் கலகலப்பானவர் மனோபாலா. யூடியூப் சேனல் வைத்து சுவாரஸ்யமான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வந்தார். ரசிகர்கள் ஏதாவது கேள்வி கேட்டு ட்வீட் செய்தால் உடனே பதில் அளிப்பார்.
தன் யூடியூப் சேனலுக்கு குறும்படங்களை அனுப்பி வைக்குமாறு கூறி மனோபாலா ட்வீட் செய்தார். அது தான் அவரின் கடைசி ட்வீட்டாக இருக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது. மயில்சாமி இறந்த பிறகு பழைய நினைவுகளை அசை போட்டு அது தொடர்பான புகைப்படங்களாக ட்விட்டரில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து வந்தார்.
தன் குரு பாரதிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். தான் இறந்துவிடுவோம் என்று மனோபாலாவுக்கு ஏற்கனவே தோன்றிவிட்டதா, அதனால் தான் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 1982ம் ஆண்டு ரிலீஸான ஆகாய கங்கை படம் மூலம் இயக்குநர் ஆனவர் மனோபாலா. கேப்டன் விஜயகாந்தின் சிறைப்பறவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன், சத்யராஜின் மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட பட படங்களை இயக்கியிருக்கிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நைனா. அவர் தமிழ் தவிர்த்து கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் தலா ஒரு படம் இயக்கியிருக்கிறார்.
சங்கராந்தி ஸ்பெஷலாக சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் மனோபாலா. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் கோஸ்ட்டி ஆகும்.
இயக்குநரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த மனோபாலா இப்படி திடீரென்று இறந்ததை யாராலும் நம்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.