ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Manobala Death: எல்லோரையும் சிரிக்க வைத்த மனோபாலா இறந்துவிட்டார் என்கிற செய்தியை பலரும் நம்ப மறுக்கிறார்கள்.
மனோபாலாManobala: பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா மரணம்: திரையுலகினர் அதிர்ச்சிநடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ செய்யப்பட்டது. கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலா இறந்துவிட்டார் என்கிற தகவல் அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நல்லா இருந்த அவர் இறக்க வாய்ப்பே இல்லை என கூறி வருகிறார்கள்.
வைரமுத்துவைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
அதிர்ச்சிManobala Death: கல்லீரல் பிரச்சனை, மூச்சுத் திணறல்: இன்று காலை நெஞ்சுவலியால் துடித்த மனோபாலாமனோபாலா இறந்தது உண்மை தான் என தெரிந்தாலும் அதை ஏற்க மனம் மறுக்கிறது என்றே திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர்களாக அதுவும் அடுத்தடுத்து இறப்பது திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிவபக்தரான மயில்சாமி சிவராத்திரி நாளில் இறந்தபோது மிகவும் வேதனைப்பட்டார் மனோபாலா.
போதும்மயில்சாமியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இத்துடன் நிறுத்திக்கோ ஆண்டவா, போதும் தாங்க முடியாது என உருக்கமாக கூறினார் மனோபாலா. இந்நிலையில் அவரே இன்று இல்லை. நிறுத்திக்கொள்ளுமாறு கூறியவரையே உங்களிடம் அழைத்துக் கொண்டீர்களே இறைவா என ரசிகர்கள் புலம்புகிறார்கள். அந்த சிரித்த முகம் தான் கண் முன்பு வந்து போகிறது. அவர் உயிரற்ற உடலாகிவிட்டார் என்பதை ஏற்க முடியவில்லை என்பதே பலரின் வேதனை.
Manobala: ரசிகர்களை அழ வைத்துச் சென்ற மனோபாலாவின் புகைப்படங்கள்
பாரதிராஜாமனோபாலாவின் மரணம் குறித்து அறிந்த அவரின் குருவான இயக்குநர் பாரதிராஜா கூறியிருப்பதாவது, மனோபாலா இறந்ததை தாங்க முடியவில்லை. என்னிடம் எத்தனையோ உதவியளார்கள் இருந்திருக்கிறார்கள். மனோபாலா சிறந்த ஓவியன். ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் படித்துவிட்டு வந்தார். அவர் இயக்கிய படங்களை பார்த்தால் ரொம்ப மென்மையாக இருக்கும். வயலன்ஸ் இருக்காது. மென்மையான குடும்பக் கதைகள், காதல் கதைகள். மனோபாலா இவ்வளவு குறுகிய காலத்தில் போவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. மனோபாலா ரொம்ப மென்மையானவன். என்னால் தாங்க முடியவில்லை என்று கலங்கினார்.
கவுதம் கார்த்திக்கவுதம் கார்த்திக் கூறியிருப்பதாவது, இயக்குநரும், நடிகருமான மனோபாலா சார் இல்லை என்பதை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது. உங்களுடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி சார். உங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணுவோம். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சூரிசூரி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,திறமையான இயக்குனர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர், அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா அவர்கள் இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு. #மனோபாலா #manobala #RIPManobala என்றார்.