தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மனோபாலாவின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனோபாலா இறப்பதற்கு முன்பாக நடிகை கோவை சரளாவை பேட்டி எடுத்த வீடியோவை தனது யூடிப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தனது திரை வாழ்வை துவங்கியவர் மனோபாலா. ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் பிள்ளை நிலா, சிறை பறவை, ரஜினி நடித்த ஊர்க்காவலன், விஜயகாந்த் நடித்த ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் 700க்கும் அதிகமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அத்துடன் ‘சதுரங்க வேட்டை’ போன்ற தரமான படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் மனோபாலா கடந்த ஒரு மாதமாகவே கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்த மனோபாலா திடீரென இன்று உயிரிழந்துள்ளார். இவரின் திடீர் மரணம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மனோபாலா திரையுலகினர் அனைவர் மத்தியிலும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
சமீபத்தில் கூட.. என் நெஞ்சில் நிழலாடுகிறது.. முதலமைச்சர் இரங்கல்: கண்ணீரில் திரையுலகம்.!
மேலும், வேஸ்ட் பேப்பர் என்ற யூடிப் சேனல் வைத்து திரையுலக பிரபலங்கள் பலரையும் பேட்டி எடுத்து வந்தார் மனோபாலா. அந்த வகையில் பிரபல நடிகை கோவை சரளாவை பேட்டி எடுத்துள்ளார். இந்த வீடியோவில் எப்போதும் போல் கோவை சரளாவுடன் சினிமா குறித்து பல விஷயங்களை கலகலப்புடன் பேசியுள்ளார்.
Manobala Son: என் அப்பாவுக்கு நீங்க தான் உயிர்.. கலங்கிய நடிகர் மனோபாலாவின் மகன்.!
இந்நிலையில் கோவை சரளாவை பேட்டி எடுத்த வீடியோவை மனோபாலா தனது ‘வேஸ்ட் பேப்பர்’ யூடிப் சேனலில் வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மனோபாலாவின் இந்த கடைசி வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதே போல் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக பகிர்ந்துள்ள பதிவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.