Manobala: மனோபாலாவின் வாழ்நாள் ஆசை இதுதானாம்..கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதே..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகவும் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று காலமானார். இவரது பிரிவிற்கு திரைத்துறையை சார்ந்தவர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட விஜய்யின் லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தெரிவித்திருந்த மனோபாலா இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் 24 படங்களை இயக்கியுள்ளார் மனோபாலா.

Leo: லியோ படத்தில் விஜய்க்காக லோகேஷ் செய்த விஷயம்..தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

இதில் ரஜினி, விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் அடங்கும். வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த மனோபாலா மெல்ல மெல்ல நடிகராக உருவெடுக்க அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வந்தன.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைத்தொடர்ந்து முழு நேர நடிகராக மாறிய மனோபாலா தயாரிப்பாளராகவும் மூன்று படங்களை தயாரித்துள்ளார். இன்று முன்னணி இயக்குனராக வலம் வரும் வினோத்தின் முதல் படமான சதுரங்கவேட்டை படத்தை மனோபாலா தான் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மனோபாலா மறைந்ததை அடுத்து அவரை பற்றிய பல தகவல்களை பிரபலங்கள் கூறி வருகின்றனர். ரசிகர்களும் மனோபாலாவின் பழைய பேட்டிகளையும் ,அவரை பற்றிய தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது எம்.ஜி.யார், கமல், மணிரத்னம் வரிசையில் மனோபாலாவும் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க ஆசைபட்டாராம். பொன்னியின் செல்வன் கதையின் மீது மனோபாலா அதீத காதல் கொண்டிருக்க அதனை எப்படியாவது படமாக எடுக்கவேண்டும் என பலமுறை முயற்சி செய்துள்ளார் மனோபாலா.

அதுதான் அவரது வாழ்நாள் ஆசையாகவும் இருந்துள்ளதாம். ஆனால் அவரால் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்கமுடியாமல் போனது. இந்நிலையில் தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட்டு வெற்றிகண்டுள்ளார். இதையடுத்து இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் மனோபாலா நடித்தாவது இருக்கலாம் என கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.