மாஸ்கோவில் அதிபர் மாளிகை அருகே பறந்த டிரோன்களை உக்ரைன் தான் அனுப்பி இருக்கக் கூடும் என்று ரஷ்ய வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.
கிரெம்ளின் மாளிகையின் குவிமாடம் அருகே பறந்த அந்த 2 மர்ம டிரோன்களை கண்காணிப்பு ரேடார்கள் மூலம் கண்டுபிடித்த ரஷ்ய பாதுகாப்புப் படையினர், அவற்றை சுட்டு வீழ்த்தினர். இதில் பலத்த சத்தத்துடன் டிரோன்கள் வெடித்துச் சிதறின.
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களை அனுப்பியது உக்ரைனாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் எந்த பகுதியும் தங்கள் தாக்குதலுக்கு தப்பிக்க முடியாது என்பதை நிரூபிக்கவே உக்ரைன் டிரோன்களை அனுப்பி இருக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் டிரோன்களுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.