கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் இனி அதற்கு பிராசசிங் கட்டணம் 199 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிரெடிட் கார்டுகள் மற்றும் கட்டணச் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் எஸ்பிஐ விதிகளிலும் சில திருத்தங்களைச் செய்துள்ளது.
அதன்படி, ஆன்லைனில் வாடகை செலுத்தும் போது கார்டை பயன்படுத்துவதற்கான ரிவார்ட்ஸ் புள்ளிகளை குறைத்துள்ளது. ரிவார்ட்ஸ் புள்ளிகள் 5x இலிருந்து 1x ஆக குறைக்கப்பட்டுள்ளன.
கேஷ்பேக் எஸ்பிஐ கார்டுகள் நகைகள், பள்ளி மற்றும் கல்வி சேவைகள், காப்பீட்டு சேவைகள் போன்ற சேவைகளில் கேஷ்பேக் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுகள், நினைவுப் பொருட்கள், உறுப்பினர் நிதி நிறுவனங்கள் மற்றும் ரயில்வே புக்கிங் ஆகியவற்றிலும் கேஷ்பேக் வழங்கப்பட மாட்டாது. அப்பல்லோ 24/7 மற்றும் ‘புக் மை ஷோ’ ஆகியவற்றில் கார்டை பயன்படுத்தினால் 10x ரிவார்ட்ஸ் புள்ளிகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in