அமெரிக்கா: டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கம்

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய வலைதளங்கள் மற்றும் காவல் துறையின் வலைதளம் ஆகியவை திடீரென முடங்கி உள்ளது. டல்லாசில் இதுபோன்று பல செர்வர்கள் முடக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

எனினும், குடியிருப்புவாசிகளுக்கான சேவைகளில் இதுவரை குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது. செர்வர்கள் பலவற்றில் மென்பொருள் வடிவிலான வைரசின் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

டல்லாஸ் நகரத்தின்ன் கணினிகளில் பாதித்து உள்ள மென்பொருள் தாக்கம் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

டல்லாஸ் நகர காவல் துறையின் வலைதளம் முடக்கப்பட்ட தகவலை அதன் பொதுதகவல் அதிகாரி கிறிஸ்டின் லோமேன் உறுதிப்படுத்தி உள்ளார். எனினும், ஹேக்கிங் செய்யப்பட்டதில், காவல் துறையில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டன என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்த பாதிப்பு ஏற்படுத்தியதற்கான காரணமும் தெரியவில்லை.

ஹேக்கிங்கால் வலைதளம் முற்றிலும் முடங்கி போன நிலையில், மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட முடியவில்லை என கூறப்படுகிறது.

இதுபற்றி எப்.பி.ஐ., அமெரிக்க சைபர் இணையதள பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு கழகங்களிடம் சி.என்.என். சார்பில் விவரம் கேட்கப்பட்டு உள்ளது. எப்போது அது சரி செய்யப்படும் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.