அரிய வாய்ப்பு.. மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. அரசு முக்கிய அறிவிப்பு

பிரெய்லி எழுத்துக்களை படிக்க உதவும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு பார்வைத் திறன் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவிகள் (Electronic Braille Reader) 2023-2024-ஆம் நிதியாண்டில் பெறத் தேவையான விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவி (Electronic Braille Reader) பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.இளநிலை கல்வி படிப்பவராகவோ அல்லது முதுநிலைக்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்.பட்டப்படிப்பு முடித்தோர் TET, TNPSC போன்ற போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுபவராக இருக்கவேண்டும்.பிரெய்லி எழுத்துகளை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எனவே, பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவி பெற விரும்பும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், பிரெய்லி முறையில் கல்வி பயின்றதற்கான சான்று, இளங்கலை கல்வி பயில்வதற்கான அல்லது முதுநிலைக் கல்வி பயில்வதற்கான சான்று அல்லது பட்டபடிப்பு முடித்து TET, TNPSC போன்ற போட்டி தேர்வுக்கு செல்வதற்கான சான்று,

ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். தங்கள் மேற்காணும் தகுதியுள்ள பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்பி பயன்பெறுங்கள்’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.