செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆலந்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தன், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ஆட்டோவில் அவரது மனைவி, தாயார், மகள், பேத்திகள் இருவர் மற்றும் தங்களது செல்லப்பிராணியுடன் கடப்பாக்கத்திற்கு சென்றுள்ளார்.
கடப்பாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் ஆலந்தூர் திரும்பும்போது, கடும்பாடி – மணமை இடையே சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆட்டோவில் இருந்த அவர்களின் செல்ல பிராணி மட்டும் உயிர்பிழைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.