1982ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மனோபாலா.இது வரையில் 40 திரைப்படங்கள் மற்றும் 16 தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி உள்ளார். மேலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த மனோபாலா.
நட்புக்காக என்ற படத்தில் சிறுசு பெருசு என இவர் பேசும் வசனங்கள் அவரது கதாபாத்திரத்தை இன்றளவும் நம்முள் நிலைத்து வைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலமே நடிகராக அறிமுகம் ஆன மனோபாலா ரஜினி, கமல், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் உடன் பல படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் 69 வயதான மனோபாலா நேற்று மே 3 உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்
மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவர் இறந்த தகவல் அறிந்ததும் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மனோபாலாவின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று மணிரத்னம், ஹெச்வினோத், தாமு, மோகன், கவுண்டமணி, பிவாசு, எல்விஜய், சேரன் ,போண்டா மணி, பேரரசு ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் அதேநேரம் ரஜினிகாந்த், கமல்,சத்யராஜ், பாரதிராஜா, இளையராஜா, கேஎஸ்ரவிக்குமார். ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மாசுப்பிரமணியன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் முகஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம், சீமான், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்,
இன்று வியாழக்கிழமை காலை 2வது நாளாக மனோபாலாவின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். முக்கியமாக சூரி, பாக்ய்ராஜ், சாந்தனு பாக்யராஜ், கோவை சரளா, பசுபதி, தாடி பாலாஜி, கனல் கண்ணன், லோகேஷ் கனகராஜ், ஷங்கர், யோகிபாபு ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் மனோபாலாவின் இறுதிச் சடங்கு தற்போது தொடங்கி உள்ளது.இவரது உடலுக்கு பொது மக்கள் வழி நெடுங்கிலும் நின்று மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.