இது முற்றிலும் வதந்தி..நம்பாதீங்க : நடிகர் சரத்பாபு சகோதரி உருக்கம்.!!

நடிகர் சரத்பாபு சற்றுமுன் காலமானார் என்று செய்திகள் உலா வந்தன. பலர் அவருக்கு இரங்களும் தெரிவிக்க ஆரம்பித்தனர்.ஆனால் அது வதந்தி என்றும், அவர் குணமடைந்து வருகிறார் என்றும் அவரது சகோதரி தெரிவித்து இருக்கிறார்.

ஆந்திராவில் பிறந்த நடிகர் சரத்பாபு 1973 ஆம் ஆண்டில் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம்,நிழல் நிஜமாகிறது படங்களில் நடித்திருந்தாலும் முள்ளும் மலரும் ,நினைத்தாலே இனிக்கும் ,நெற்றிக்கண், வேலைக்காரன், முத்து, அண்ணாமலை, ஆளவந்தான் படங்களின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் 72 வயதாகும் சரத்பாபுவிற்கு சில தினங்களுக்கு முன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். உடனே அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வந்தன.

நேற்றிரவு மஅவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் பரவின. காலை நடிகர் மனோபாலா உயிரிழந்திருக்கும் நிலையில் மாலையில் சரத் பாபு உயர் எழுந்து விட்டதாக தகவல் பரவியது சினிமா ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது .

இந்த நிலையில் சரத்பாபு சகோதரி மறுப்பு தெரிவித்திருக்கிறார். சரத் பாபு பற்றிய அனைத்து செய்திகளும் தவறாக வருகின்ற. ன அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சரத்பாபு குணமடைந்து வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வந்த அறை மாற்றப்பட்டு இருக்கிறது. சரத்பாபு குணமடைந்து விரைவில் உங்களிடம் பேசுவார் என்று நம்புகிறேன் . அவரைப் பற்றி பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.