உக்ரைனுக்கு புதிதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா சுமார் 35 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வழங்கி உள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
இதனை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனின் கோரிக்கையை ஏற்று ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் மற்றும் கவச வாகனங்களை தகர்க்கும் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.