‘ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, தொலைபேசி வாயிலாக குரலை மாற்றி பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. இந்தியாவில், இத்தகைய தொலைபேசி அழைப்புகளை ஏற்றவர்களில் 83 சதவீதத்தினர், தங்கள் பணத்தை இழந்திருக்கின்றனர்.
ஆதாரம்: ‘மெகபீ’ எனும், வைரஸ் தடுப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு.
ஏழு நாடுகளில், 7,054 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்தியாவில் 1,010 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.
3 நொடி நேரம் ஒருவர் பேசிய ‘ஆடியோ’ கிடைத்தாலே போதுமானது; அந்த குரலை அப்படியே நகலெடுத்து விடலாம்.69 சதவீத இந்தியர்கள், உண்மையான குரலுக்கும், போலியான குரலுக்கும் வித்தியாசம் கண்டறிய முடியவில்லை என, தெரிவித்துள்ளனர்.
இந்திய இளவயதினர், தாங்கள் நேரடியாகவும் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இது உலக சராசரியை விட,
25 சதவீதம் அதிகம்.
83%
போலி அழைப்பை ஏற்று, பணத்தை இழந்தவர்கள்.
48%
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழந்தவர்கள்.
ஏமாற்றமடைந்தவர்கள்
*நண்பர்கள், மிக நெருங்கிய உறவினர்கள் குரலால்
*பெற்றோர் குரலால் ஏமாந்தவர்கள்
*கணவன் அல்லது மனைவி குரலால்
*பிள்ளைகளின் குரலால்
ரகசிய வார்த்தையை பயன்படுத்துங்கள்!
இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க, இனி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசும் போது, ரகசிய வார்த்தைகள் எதையாவது பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது. -ஸ்டீவ் குரோப்மேன்,தலைமை தொழில்நுட்ப அதிகாரி, மெகபீ.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement