வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மீரட் : உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் ஜாமின் பெற்ற பிரபல தாதா, மீரட்டில் நடந்த ‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர், பிரபல தாதா அனில் துஜானா. இவர் மீது, 60 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
ஒரு கொலை வழக்கில் கைதாதி சிறையில் இருந்த இவர், கடந்த வாரம் ஜாமினில் வெளியே வந்தார். அந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சி ஒருவரை, மீரட்டில் நேற்று சந்தித்து அவர் மிரட்டியுள்ளார்.
அப்போது அங்கு வந்த, உத்தர பிரதேச போலீசின் சிறப்பு அதிரடிப் படையினர், துஜானா மற்றும் அவருடைய கூட்டாளிகளை சுற்றி வளைத்தனர். போலீசார் மீது துஜானா மற்றும் அவருடைய கூட்டாளிகள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.சிறப்பு அதிரடிப் படையினர் சுதாகரித்து எதிர் தாக்குதல் நடத்தினர். இதில், துஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement