இந்திய அரசின் FAME-II மானியம் தொடர்பான எலக்ட்ரிக் சார்ஜருக்கான ₹ 288 கோடி பணத்தை திரும்ப வழங்க ஏதெர், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ வீடா நிறுவனங்கள் முன்வந்துள்ளது.
முன்பே இது தொடர்பாக ஓலா திரும்ப தர உள்ள 130 கோடி தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தோம். மேலும் ஹீரோ எலக்ட்ரிக், ஓகினாவா ஆட்டோடெக் என இரு நிறுவனத்துக்கு 249 கோடி ரூபாயை மீட்டெடுக்க ஒன்றிய அரசு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் இருந்து ரூ.116 கோடி அபராதமும் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 133 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
EV Charger Refund
நான்கு நிறுவனங்களும் மானியங்களைப் பெறுவதற்காக அரசின் FAME திட்டத்தின் கீழ் 1.5 லட்ச ரூபாய்க்கு மேல் விலையை நிர்ணையம் செய்துள்ளன. தற்பொழுது ஒலா, ஏதெர், விடா போன்ற நிறுவனங்களை விலையை குறைத்துள்ளன. குறிப்பாக, மென்பொருள் அம்சங்கள் மற்றும் ஆஃப் போர்டு சார்ஜருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கியுள்ளன.
இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) மேற்கொண்டு வரும் ஒழுங்குமுறை நடவடிக்கையை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், ஓலா S1Pro மாடல் ஸ்கூட்டரை FY 2019-20 முதல் மார்ச் 30, 2023 வரை வாங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆஃப்-போர்டு சார்ஜருக்கான கட்டணத்திற்கான பணத்தை திரும்ப தர உள்ளது.
ஒரு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 9000 கட்டணத்தை சுமார் 1,00,000 ஸ்கூட்டர்களுக்கு ரூபாய் 130 கோடி திரும்ப வழங்குகின்றது.
ஏதெர் எனெர்ஜி
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சார்ஜருக்கான தொகையை அதிகபட்சமாக ₹ 140 கோடியை பணத்தை திரும்ப 95,000 வாடிக்கையாளர்களுக்கு ஏதெர் எனெர்ஜி வழங்குகின்றது. குறிப்பாக ஏப்ரல் 12, 2023 வரை எலக்ட்ரிக் டூ வீலரை வாங்கியவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கூடுதலாக மென்பொருள் மேம்பாடு பெற கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் பேட்டரி திறனை குறைத்த காரணத்துக்கு ₹25 கோடியை கனரகத் தொழில் துறை அமைச்சகம் அபராதமாக வசூலிக்க உள்ளது.
டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஐக்யூப் S மே 2022 முதல் மார்ச் 2023 வரை வாங்கிய 87,000 வாடிக்கையாளர்களுக்கு ₹15.61 கோடியை திருப்பிச் செலுத்தும்.
ஹீரோ விடா
அடுத்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ‘VIDA V1 Plus’ மற்றும் ‘vida V1 Pro’ மாடல்களை வாங்கிய 1,100 வாடிக்கையாளர்களுக்கு ₹2.23 கோடியை திருப்பித் தரவுள்ளது. மார்ச் மாதம் வரை ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு பொருந்தும்.