கட்டுக்கடங்காத வன்முறை.. கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவு..!

மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காத சூழலில், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Meiteis சமூகத்திற்கு, பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பழங்குடியினத்தவர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இருதரப்பினருக்கும் இடையே மோதல் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டனர். வன்முறை காரணமாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்த நிலையில், சிஆர்பிசி 1973 -ன் படி கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில அரசு உத்தரவிட்டது.

அதீத மோதலின் போது அனைத்து எச்சரிக்கைகளுக்கு பிறகு, வன்முறையாளர்களை கண்டவுடன் சுட அனைத்து மாஜிஸ்திரேட்டுகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வன்முறை நிலவும் இம்பால்,பிஷ்னுபூர் உட்பட 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுதும் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.