கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தைத் தடை செய்யப் போவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய் பஜ்ரங்பலி என்று அனுமனின் நாமத்துடன் உத்தர கன்னடா பகுதியில் பிரதமர் மோடி நேற்று தமது பரப்புரையைத் தொடங்கினார்.
காங்கிரசின் ஊழல் கட்டுமானத்தைத் தகர்த்ததால் தம்மை அக்கட்சியினர் வசைபாடுவதாகவும், தம்மை வசை பாடும் காங்கிரசுக்குத் தக்க தண்டனையளிக்கும் வகையில் வாக்காளர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மோடி கேட்டுக் கொண்டார்.
பாஜகவை வீழ்த்த முடியாது என்பதால் காங்கிரஸ் வசைபாடும் அரசியலை கைப்பற்றியிருப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார்.